Monday, July 5, 2010

கதாபாத்திரங்கள் !!

எழுத்து - காதம்பரி
சிறப்பு நன்றிகள் - பல்லவி பிரஷாந்த்.


காதம்பரி
- பின் வரும் காமெடிகளை பார்த்துக்கொண்டு , பல்லவி பிரஷாந்த் , மகேஸ்வரி கணேஷ்ராம் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அப்பாவிப் பெண்.
இந்தக் கதையை கூறப்போகிறவர்.

மகேஸ்வரி- ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் தூங்கிக் கொண்டு, கால்வாசி நேரம் எதாவது ஒரு மேட்ச்சை பார்த்துக்கொண்டு, முழு நேரமும் மனதில் கநேஷ்ராமை நினைத்துக் கொண்டு , ரூம்மேட்ஸ் தன்னை ஓட்ட , தான் வாழ்கையை ஜாலியாக ஒட்டிக்கொண்டிருப்பவள்.

பிரஷாந்த் ராம்குமார்-
காதம்பரியின் தத்து அண்ணன் மற்றும் அலுவலக நண்பன்
பல்லவி - காதம்பரியின் தோழி
மனதில் ஒன்று வைத்துகொண்டு வெளியில் சீன் போட்டுக்கொண்டு சுத்தும் அதிசியப் பிறவிகள் மேற்கூறிய இருவரும் .

கணேஷ்ராம் - மகேஸ்வரிக்கு ரூட் போடும் பாண்டிய வம்சத்தில் வந்தவன்

காதம்பரியின் அலுவலக நண்பர்கள்:
விநீஷ் - . ஓசியாக என்ன கிடைத்தாலும் உண்டு களிப்பான்
நிதீஷ் - பணம் மட்டுமே அவன் கண்கள் காணும்
ஈஸ்வரி - விநீஷ் இன் ஹைதராபாத் தோழி. "FA" என்ற சோப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர். வாய்ப்பு கிடைத்தால் பொலம்ப வேண்டும் என்பது இவள் குறிக்கோள்.

சரத் ராமநாதன் - பல்லவியின் அலுவலக "Mentee"

பிரஷாந்த் ராம்குமாரின் கல்லூரி நண்பர்கள்.
ரமேஷ் நாகராஜ் - எப்போதும் தான் உண்டு தன் காதல் மட்டுமே உண்டு என்று சுத்துவான்.
ப்ரீத்தி - ரமேஷ் நாகராஜின் "ஆளு". தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் ரமேஷுடன் எப்போதும் சுத்துவாள்

லக்ஷ்மன் சங்கரன் - எப்போதும் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு , அடிக்கடி நான் எங்கு இருகிறேன் என்ற கேள்வியை கேட்பான் . இப்படி இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கையுடன் "தேடல்" நிறுவனத்தில் பணிபுரியும் "நேஹா" என்ற பெண்ணிற்கு ரூட் விட்டுக்கொண்டு இருக்கிறான். இதற்கு பிரஷாந்த் ராம்குமாரை இவன் மலை போல நம்பி இருப்பது, இந்த கதையின் முக்கியத்துவம்.இப்படி இருக்க தினமும் எழுத்துகளை வைத்து "என்னை நம்பாதே, ஐயோ என்னை நம்பாதே" என்று இணையதளத்தில் உரையாடல் கதை மூலம் தெரிவிக்கிறான் பிரஷாந்த் ராம்குமார் .

ரவிச்சந்திரன் - ஈர்க் குச்சியாக இருந்துகொண்டு தண்ணீரில் மிதப்பான்

இவ்வாறு எல்லாம் விவரிக்க வார்த்தைகள் போதாத அளவிற்கு அட்டுழ்யம் செய்யும் எதிர் எதிர் கட்சி பொதுச் செயலாளர்கள் - பிரஷாந்த் மற்றும் பல்லவி.

படித்து மகிழுங்கள் !!!



Thursday, June 24, 2010

தோழமை !!!

பல சிந்தனைகளுக்குப் பிறகு இந்த காவியக் கதை எழுத்துருவம் பெறுகின்றது. இக்கதை ஒரு பெண்ணின் தோழிக்கும் அவள் தத்து அண்ணனுக்கும் இடையே நடக்கும் மோதல் காதல் மற்றும் அதை சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்களையும் எடுத்துரைக்கின்றது.ஒரு மனிதன் தனக்கு மற்றவருடன் ஏற்படும் ஈர்ப்பை தெளிவாக உணராமல் செய்வதறியாது தத்தளிப்பதும், உணர்ந்த பின் அதை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் தடுமாறுவதும் வாழ்வில் இயல்பு. ஒரு சிலர் தெளிவாக ஒரு புது உறவின் அவசியம், அதனால் நடைமுறையில் இருக்கும் வாழ்வு , குடும்பம், நட்பு, எவ்வாறு மாறுபடும் என்பதை ஆராய்ந்து அறிந்து முடிவு எடுக்கும் தன்மையினராய் இருப்பார்கள். மற்ற சிலரோ எதைப் பற்றியும் கவலை இன்றி தன் சுகம், இன்பம், இவற்றை மற்றும் கருதி வாழ்கையைத் தொடர்வார்கள்.
பல இடங்களில் ஆணும் பெண்ணும் இணைந்தே முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் இந்தக் கதையிலோ நாம் முற்றிலும் மாறுபட்ட இரு மனிதர்களை சந்திக்க இருக்கிறோம். இவ்விருவரும் பல செயல்களில் எண்ணங்களில் ஒரே சிந்தனைப் படைத்தவர்கள். ஆனால் இருவருக்கும் "ஈகோ" எனப்படும் ஒரு கொடிய குணம் உண்டு. இதனால் அவர்கள் வாழ்வில் எவற்றை
எல்லாம் தவறவிடுகின்றனர், சுற்ற முற்றம் உள்ள நண்பர்கள் உள்ளாக்கப்படும் அவதி ஆகியவற்றைக் காணலாம். இந்த கதையின் மூலம் நான் கூற முற்படும் கருத்து "ஈகோ" ( எட்சிங் காட் அவுட்) என்பதை விட்டு வெளியே வந்தால் வாழ்வு நாம் விரும்பும் வகையில் அமைவதோடு நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கும் என்பதே!

இதுவரை கூறியது போதும், படியுங்கள் மகிழுங்கள் !